தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், சமீப காலமாக அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவரது அரசியல் கட்சி அறிவிப்பு, மக்கள் சந்திப்புகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், நடிகர் சரத்குமார், விஜய்யின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சரத்குமார், “ஒரு நடிகராக நான் பொதுவெளியில் வரும்போதே என்னை பார்க்க பெருங்கூட்டம் வருகிறது. அப்படி இருக்க, இதுவரை வெளியிலேயே வராத, மக்களை நேரடியாக சந்திக்காத நடிகர் ஒருவர் தெருவில் வரும்போது கூட்டம் அதிகமாக கூடுவது இயல்பான விஷயம் தான்.
ஆனால் அந்த கூட்டம் வாக்குகளாக மாற சாத்தியம் இல்லை.” என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

சரத்குமார் தனது கருத்தில், திரை நட்சத்திரங்களுக்கு இருக்கும் ரசிகர் கூட்டமும் அரசியல் ஆதரவும் ஒன்றல்ல என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். “சினிமா ரசிகர்கள் ஒரு நடிகரை விரும்புவது வேறு; அவரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வது வேறு.” என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அரசியலில் வெற்றி பெற மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு, நீண்ட காலமாக அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்பதையும் சரத்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
Listen News!