• Apr 17 2026

நடுத்தெருவுக்கு வந்த மனோஜ்.. பறிபோகுமா விஜயாவின் சொத்து.?அனல் பறக்கும் திருப்பங்கள்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் ,  மனோஜின் கம்பெனி நட்டத்தில் இயங்குவதை  ஜீவா கண்டுபிடித்து சொல்லுகிறார். அதன்படி 30 லட்சம் ரூபாய் லாஸ்டிஸில் இருப்பதாக சொல்ல,   மீனா வாங்கி கொடுத்த ஆர்டருக்கு மீதி பணத்தை கேட்குமாறு மனோஜ் சொல்லுகின்றார். 

அதன்படி எல்லோரும் அவர்களுடைய கம்பெனிக்கு கிளம்பிச் செல்ல, அங்கு அவர் கோமாவில் இருப்பதாகவும் தற்போது அவரால் பேச முடியாது எனவும் அதிர்ச்சி கொடுக்கின்றனர். 

மேலும் மனோஜ் ஏற்கனவே சென்ற போது அங்கு இருந்த மேனேஜருடன்  வம்பு இழுத்திருந்தார். அவர்தான் தற்போது கம்பெனியை பொறுப்பேற்றுள்ளார் என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைகின்றார்.

இதன் போது மனோஜ், தங்களுக்கான மீதி பணத்தை தருமாறு கேட்க, அது அவங்கதான் தர வேண்டும். ஆனா இப்ப அவங்க கோமால இருக்கிறாங்க என்று  சொல்லுகின்றார். ஆனாலும் அக்ரிமெண்ட் போட்டிருக்கின்றோம் என்று சொல்ல, அப்படி என்றால் அக்ரிமெண்டை முடித்து விடுவோம், இல்லை கேன்சல் பண்ணி விடுவோம்  என்று சொல்லுகின்றார் மேனேஜர். 


மேலும் இனி இந்த பக்கம் வர வேண்டாம் என வார்னிங் கொடுக்கிறார். இதனால் மனோஜ் ஒன்றும் பண்ண முடியாமல்  தவிக்கின்றார்.   ரோகிணியும் நான் அப்போதே சொன்னேன் இந்த  புதிய ஆபீசை எடுக்க வேண்டாம் என்று  என மனோஜை திட்டுகின்றார். 

இன்னொரு பக்கம்  அண்ணாமலை வீட்டுக்கு   மனோஜ் கடன் வாங்கிய கந்துவட்டிக்காரர் வருகிறார்.   இதன்போது மனோஜ் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதையும், அதனை கட்டுவதற்கு  வீட்டிற்கு  உரிமையான ஒருவர்  கையெழுத்து போட்டுத் தருமாறு  மிரட்டுகிறார். 

அதன்படி வேறு வழியின்றி அண்ணாமலை கையெழுத்து போட  முனைகின்றார். ஆனாலும் அங்கிருந்த முத்து  தடுக்கின்றார்.  இதுதான் இன்றைய தினம் வெளியான எபிசோட். 

Advertisement

Advertisement