விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் இறுதியாக இடம்பெற்ற கார் டாஸ்க் பல சர்ச்சைகள் எழுதுவதற்கு காரணமானது. காருக்குள் இருந்த சாண்ட்ராவை பார்வதியும் கமரூதீனும் வலுக்கட்டயமாக வெளியே தள்ளினார்கள். இதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி பார்வதிக்கும் கமரூதீனுக்கும் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பினார். பிக் பாஸ் வரலாற்றிலேயே முதலாவது பெண் போட்டியாளருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது இதுவே முதல் சம்பவமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பிக் பாஸ் 9வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர் திவாகர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் சாண்ட்ரா பார்வதியின் கோபத்தை தூண்டுறாங்க.. கேம்ல போட்டியாளர்கள் மாத்தி மாத்தி தள்ளி விடுவது இயல்பு .
ஒரு தடவை துஷாரை வினோத் தள்ளிவிட்டு இருந்தார். அதேபோலத்தான் சபரியும் பார்வதியை தாக்கி இருந்தார். இதை கேமா தான் பார்க்கிறோம். ஒரு காலத்தில் சாண்ட்ரா அக்கா நிறைய வார்த்தைகளை விட்டு இருக்காங்க. நாங்க உள்ள இருக்கும்போதும் சாண்ட்ரா அக்கா பார்வதிய பயன்படுத்திக்கிட்டு முதுகுல குத்தி இருக்காங்க என்று கூறியுள்ளார்.
Listen News!