நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘சிறை’, வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், அதன் வலுவான கதைக்களம் மற்றும் உணர்ச்சிபூர்வமான திரைக்கதை காரணமாக பெரும் கவனம் பெற்றுள்ளது.

டிசம்பர் 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான ‘சிறை’, முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தை பதிவு செய்தது. குறிப்பாக, படம் வெளியாகிய முதல் வாரத்திலேயே திரையரங்குகளில் நல்ல கூட்டத்தை ஈர்த்தது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 10 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள ‘சிறை’ திரைப்படம் உலகளவில் ரூ.17.5 கோடி வசூலை கடந்துள்ளது. வணிக ரீதியாக பெரிய பட்ஜெட் இல்லாத நிலையில், இந்த வசூல் திரையுலக வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!