அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கு கொண்டார்கள். அதில் எதிர்பாராத விதமாக 24 மணி நேரத்தில் எவிக்சன் நடைபெற்ற போது, மகாராஜா நடிகையான சாச்சனா யாருமே எதிர்பார்க்காத வகையில் வெளியேறி இருந்தார்.
அதன் பின்பு நான்கு நாட்கள் கழித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அதுவரையில் அவர் சீக்ரெட் ரூமில் இருந்ததாக கூறப்பட்டது. மேலும் ஒரு மாதத்திற்கு உள்ளையே ஆறு வைல்ட் கார்ட் என்ட்ரிகள் உள் நுழைந்தார்கள். அதற்குப் பிறகு சரி ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
தற்போது இறுதியாக நேற்றைய தினம் இடம்பெற்ற டபுள் எவிக்ஷனில் மஞ்சரியும் ராணவும் வெளியேறி இருந்தார்கள். இதனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் தான் காணப்படுகின்றார்கள்.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் எட்டின் 91 வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ சற்று முன் வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி என்ன சொல்கின்றார் என்பதை விரிவாக பார்ப்போம்.
அதில் இப்போது உங்களுடன் உள்ள போட்டியாளர்களுக்கு பதிலாக வெளியேறியவர்களுள் யார் இருந்திருக்கலாம் என்று ஹவுஸ்மேட்சை பார்த்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகின்றார்.
இதன் போது சௌந்தர்யா ஜெப்ரியுடன் விஷாலை கம்பல் பண்ணும் போது விஷால் சேப் கேம் ஆடுவதாக தோன்றுகின்றது. மேலும் முத்துக்குமரன் போல மண்டையை கழுவாமல் ஆனந்தி விளையாடியதாக சௌந்தர்யா சொல்லுகின்றார்.
ரயான் சொல்லுகையில், அருணுக்கு பதிலாக ரவீந்தர் இருந்திருக்கலாம் என்று சொல்லுகின்றார். அதேபோல விஷாலும் ஜாக்குலினுக்கு பதிலாக அன்ஷிதா இருந்திருக்கலாம் என்று சொல்கின்றார்.
இதன் போது முத்துக்குமரனின் கருத்து சுயநலமானது என்று சொல்றீங்களா என ரயானை விஜய் சேதுபதி கேட்க, ஆமாம் என நேரடியாகவே பதில் கூறுகின்றார்.
Listen News!