ஜீ தமிழ் தொலைக்காட்ச்சியில் பல சுவாரஸ்யமான கதைக்களத்துடன் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய், வீரா என நிறைய ஹிட் சீரியல்கள் ரசிகர்கள் மனங்களை கவர்ந்ததாக இருக்கிறது. இந்நிலையில் சில சீரியல்கள் முடிவு பெற்று புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அப்படி தற்போது இன்னுமொரு சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தேன் வந்தாய் தொடர் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இன்னொரு தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வந்துள்ளது.ரசிகர்களின் மனங்களை கவர்ந்த" நினைத்தாலே இனிக்கும்" தொடர் தான் முடிவுக்கு வர இருக்கிறதாம்.
இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் "ஏன் முடிகிறீர்கள்? நன்றாக தானே ஒளிபரப்பாகி வருகிறது. வீ மிஸ் திஸ் சீரியல்" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த சீரியல் முடிந்த பின்னர் அதே நேரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல்களின் ப்ரோமோக்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மக்களுக்கு பிடித்த சீரியல்கள் நிறைவுக்கு வருவது சட்டென சீரியல் டிஆர்பில் அடிவாங்குவதற்கும் வாய்ப்பும் உள்ளது.
Listen News!