விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர் 2, சின்ன மருமகள், அய்யனார் துணை, மகளே என் மருமகளே என பல சீரியல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதை கதைக்களத்துடன் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம்.
ஏற்கனவே, மீனா க்ரிஷ்க்காக ரோகினிக்கு சப்போர்ட் பண்ணுகின்றார். தற்போது க்ரிஷை விஜயா வீட்டில் கொண்டு வந்து சேர்க்கின்றார். ஆனாலும் விஜயா ரோகிணியிடம் க்ரிஷிடம் நெருங்கிப் பழக வேண்டாம் என்று கண்டிஷன் போடுகின்றார்.

தற்போது வெளியான ப்ரோமோவில், என்ன சொல்லி க்ரிஷை வீட்டுக்குள்ள கூட்டி வந்த என்று மீனா ரோகிணியிடம் கேட்க, விஜயா செந்தாமணியிடம் பேசும் போது அவர் புதுக் கதையை சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தார். இறந்து போன க்ரிஷின் அம்மாவுடைய ஆவி க்ரிஷுக்குள் வந்துடும் என்று பயமுறுத்தினாங்க என்று பயமுறுத்த, விஜயா பயந்ததாக ரோகிணி சொல்கின்றார்.
இதைக்கேட்ட மீனா, உடனே அந்த ஆவி எனக்குள்ள வந்தது என்று சொல்லாம இருந்தா சரி என்று சொல்ல, நல்ல ஐடியா கொடுத்தீங்க என்று மீண்டும் மீனாவின் ஐடியாவை கேட்ச் பண்ணுகின்றார் ரோகிணி.
அதன்படி மனோஜ் வீட்டிற்கு வரும்போது கதவை சாத்துமாறு சொல்லி, நான் க்ரிஷின் அம்மாவுடைய ஆவி கல்யாணி. என் பையன் கிட்ட எப்பவுமே பாசமா நடந்து கொள்ளு என்று பயமுறுத்த, மனோஜ் சரி என்று விழுந்தடிச்சு ஓடுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!