விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில், சரவணன் மயில் குறித்த உண்மையை எல்லாம் வீட்டில இருக்கிற ஆட்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதுதான் இதுவரை நிகழ்ந்து கொண்டிருந்தது....

இந்நிலையில், புதிய ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், பாண்டியன் மயிலைப் பார்த்து உங்க அப்பா, அம்மா கிட்ட நீ போன் பண்ணிப்பேசுறீயா இல்ல நான் பேசவா என்று கேட்கிறார். பின் பாண்டியன் மயிலோட அப்பாவுக்கு போன் பண்ணி உடனே வெளிக்கிட்டு வாங்க என்கிறார்.
வீட்டுக்கு வந்தவங்க கிட்ட கோமதி நீங்க எல்லாம் என்ன மனுஷ ஜென்மமோ என்று கேட்கிறார். அதனை அடுத்து மயிலோட அம்மா கோமதியைப் பார்த்து நாங்க என்ன ஏமாத்திட்டோம் என்று கேட்கிறார். அதுக்கு கோமதி உங்க பொண்ணு என்ன படிச்சிருக்கா என்று கேட்கிறார்.

பின் மயில் அப்பா எங்க பொண்ணு MA Degree படிச்சிருக்கா என்கிறார். அதைக் கேட்ட சரவணன் இதுக்கு மேலயும் பொய் சொல்ல வேணாம் என்கிறார். பின் கோமதி உங்க பொண்ணைப் பற்றி எல்லா உண்மையும் தெரிய வந்திட்டு என்கிறார். அதனை அடுத்து பாண்டியன் மயிலை உங்க வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போங்க என்கிறார்.
Listen News!