ரியாலிட்டி ஷோக்கள் பல திறமையான கலைஞர்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில், விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் மனதை வென்ற பல நடிகர்கள், காமெடியன்கள் மற்றும் பார்வையாளர்களின் இதயத்தைக் கவர்ந்த கலைஞர்களாக மாறியுள்ளனர். இதில், காமெடியன் மற்றும் நடிகர் பாலா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

பாலா தனது காமெடி மற்றும் நடிகர் வாழ்க்கையை விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் தொடங்கி, அதன் பின்னர் சின்ன சின்ன ஷோக்களில் கலக்கினார்.
அத்துடன், அவர் தற்போது தனிப்பட்ட வாழ்க்கையில் மக்களுக்காக சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதுவரை மக்களுக்காக பல உதவிகளை செய்து வருகின்றார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பெய்த கடுமையான மழை காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, போக்குவரத்து சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைப் பார்த்த, பாலா தானே நேரில் சென்று சேதமடைந்த சாலையை பார்வையிட்டு, ஜல்லிக்கற்களைக் கொட்டி சாலையை சீரமைத்துள்ளார். பாலாவின் இந்த சமூக சேவை முயற்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!