• Jan 19 2025

ரோகிணியின் உருட்டுக்கு மொத்தமா லோக் போட்டாச்சு... விஜயா பிடித்த கிடுக்கிப்பிடி! ஸ்ருதியின் அம்மா தீட்டும் சதி?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில் விஜயா ரோகினியிடம், அவரது அப்பாவிடம் பேசி மனோஜ்க்கு ஒரு நல்ல வழி பண்ணுமாறு அதிரடியாக சொல்லுகிறார். ரோகிணி சமாளித்து பேசினாலும் அதை கேட்காமல், கொஞ்சம் கரராக பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து கிச்சனுக்கு வந்த ரோகினி, மீனாவிடம்  முத்துவுக்கு எப்படி கார் வாங்கினீங்க? எப்படி காசு வந்திச்சு? இல்ல முத்து பொய் சொல்றாரா? இல்ல கடன் வாங்கிங்களா? என கேள்வி மேல கேள்வியாக கேட்கிறார். 

மேலும் அவர் உங்களுக்கு அடிக்கிறார், திட்டுகிறார், உங்க தம்பியின் கையை உடைச்சு இருக்கார். ஏன் அவருக்கு கார் வாங்கி கொடுத்தீங்க என மீனாவை குழப்பி விடுகிறார். ஆனாலும் தன் புருஷனை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் மீனா. 

இவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ருதி, உள்ளே வந்து ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் குள்ள நடக்கிற விஷயங்களை  மூன்றாவது பர்சன் கேட்க கூடாது. மீனா புருஷனுக்காக செஞ்சது நல்ல விஷயம் தானே என ரோகிணிக்கு சொல்கிறார். அதற்கு ரோகிணி ஒன்றும் சொல்ல முடியாமல் அங்கிருந்து செல்கிறார்.


அதன்பின், விஜயா வீட்டுக்கு வந்த ஸ்ருதியின் அம்மா, ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்ப்பதற்காக பெரிய மண்டபம் பாத்து இருக்கேன். ஒருநாள் செய்வோம் என விஜயாவிடம் சொல்ல, அங்கிருந்த ரோகிணிக்கும் தாலி பிரித்து கோர்க்க வேண்டும் ஒன்னா செய்வோமா என கேட்கிறார். அதற்கு சரியென ஸ்ருதியின் அம்மா சொல்கிறார்.

இதை அடுத்து ஸ்ருதியின் அம்மா சென்றவுடன் ரோகிணியிடம் தாலி பிரித்து கோக்குற சடக்குக்கு உங்க அப்பா வரணும் என  சொல்ல, அவர் பிசியா இருப்பார் சமாளிக்கிறார் ரோகிணி. ஆனால் எத்தனை தடவை இந்த காரணத்தை சொல்லுவ, இந்த தரம் உங்க அப்பா வந்தே ஆகணும் என மீண்டும் மிரட்டும் பாணியில் ரோகினியை எச்சரித்து செல்கிறார்.

பாலருக்கு சென்ற ரோகிணி, தனது நண்பியிடம் நடந்தவற்றைக் கூற, உங்க அப்பா வரணும் என்றா ஆவியாகத்தான் வரனும். இதையும் சமாளிப்போம் என நம்பிக்கை கொடுக்கிறார். 

மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா, ஸ்ருதியின் அப்பாவிடம் ரவிய  எங்களோட வீட்டு மாப்பிள்ளை ஆக்குவதற்கு பிளான் போட்டாச்சு . ஸ்ருதிக்கு தாலி பிரிச்சி கோக்குற சந்தர்ப்பத்தை வைத்து தான் குடும்பத்தை பிரிக்கணும் . அதுவும் முத்த வச்சு தான் நான் பிளான் போடுறேன் என சொல்லுகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement