• Jan 18 2025

விஜயா தாலிக்கு டார்கெட் போடும் முத்து! குஷியில் மீனா! கோவத்தில் சுருதி! குற்றவுணர்ச்சியில் ரோகிணி!

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் போட்டியில் மீனா முத்து ஜெய்கின்றனர். பின்னர் வீட்டுக்கு ஆரவாரமாக வந்து பணத்தை அண்ணாமலையிடம்  கொடுக்கின்றனர். அதனை ரூம் கட்டுவதற்கு செலவு செய்யுமாறு கூறவே அப்படியே செய்வோம் என்று எண்ணுகின்றனர். இதனை பார்த்த விஜயா எரிச்சல் அடைவதுபோல எபிசோட் முடிந்தது. இன்றைய நாளுக்கான எபிசோட் எப்படி இருக்க போகிறது என பார்க்கலாம் வாங்க. 


ரோகிணி இடம் மனோஜ் " நான் வேற பொண்ணோட லிவ்விங்க்ல இருந்தேன். அது எல்லாம் தெரிஞ்சும் என்ன நீ ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட இப்போ நான் பிஸ்னஸ் மேனா இருக்க நீதான் காரணம் நமக்குள்ள சண்டையே வாராது இல்லனா நமக்குள்ளே ஏதோ சொல்லாம மறச்சி இருக்கோம்னு சொல்லுறாங்க அப்படி எல்லாம் இல்ல" என்று கூறி ரோகிணி மடியில் படுத்துக்கொள்கிறார். ரோகிணி குற்றவுணர்ச்சியில் இருக்கிறார்.


மற்ற ஒரு பக்கம் சுருதி எனக்கு குழந்தை பெத்துகிறதுல விருப்பம் இல்லனு சொன்னன் தானே பிறகு நீ ஏன் 3 குழந்தை பெத்துக்கலாம்னு சொன்ன? கல்யாணம் பண்ணி கூட்டிவந்துட்டம் சொன்னது எல்லாம் கேப்பானு நினைச்சிட்டியானு சண்டை போட்டு கொண்டிருக்கிறார். சுருதியை ர், ரவி சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்.


மற்ற பக்கம் மீனா மற்றும் முத்து இருவரும் சந்தோசமாக பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது விஜய்யா தண்ணி எடுப்பதற்காக வருகிறார். அவரை பார்த்ததும் முத்து பாட்டுப்பாடி மீனாவுடன் டான்ஸ் ஆடுகிறார். ரூம் கட்டுவது தொடர்பாக கதைத்துக்கொண்டு இருக்கின்றனர். மீனா நாங்க ஜெயித்த பணத்தை என்ன செய்வோம் என்று கேட்க அதற்கு முத்து ரூம் காட்டுவோம் என்று சொல்கிறார். அது தொடர்பாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.


அடுத்த நாள் காலையில் மேஸ்திரியை வரவழைத்து வீடு கட்டுவது தொடர்பாக கதைக்கின்றனர். இதனை ஒட்டுக்கேட்டு கொண்டிருந்த விஜயாவை பார்த்து முத்து ரூம் கட்ட காசு பத்தலனா அம்மாடா தாலியா அடகு வச்சிருவாம் இல்லனா வித்துருவம் என்று கூறுகிறார். இதனை கேட்ட விஜய்யா ஓடிவிடுகிறார்.இதற்கிடையில் மனோஜ் அடகு வைத்த ரோகினின் தாலியை மீட்டு வந்து கொடுக்கிறார். அவர்களை அண்ணாமலை மற்றும் விஜயா ஆசீர்வாதம் செய்கின்றனர். அத்தோடு இன்றைய நாளுக்கான எபிசோட் முடிவடைகிறது. 


Advertisement

Advertisement