• Aug 29 2026

தூள் பறக்கும் தங்கலான் வசூல்... முதல் நாளே இப்படியா?... குஷியில் படக்குழு...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சியான் விக்ரம் ஒவ்வொரு படத்திலும் தன்னை வித்தியாசமாக காட்டிக்கொள்ள முயற்சிப்பார். அப்படி அவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று வெளியான தங்கலான் திரைப்படத்தின் முதல் வசூல் விபரம் வெளியாகிவுள்ளது.   


பா. ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் நடித்து உருவான இப்படம் நேற்று உலகளவில் திரையரங்கில் வெளிவந்தது. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, முன்னணி இசையமைப்பாளர். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இப்படத்தின் மீது இருந்தாலும், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என அனைவருடைய நடிப்பும் மிரட்டலாக இருந்தது. 


ஜி. வி. பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Advertisement

Advertisement