• Jan 06 2025

அவன் முன்னாடி போகக்கூடாது! ரயான் மீது வன்மத்தை காட்டும் போட்டியாளர்கள்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடத்தே எதிர்பார்ப்பினை கூட்டியுள்ளது. இந்நிலையில் அதிரடியான அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது அதுகுறித்து பார்ப்போம்.. 


பிக்பாஸ் சீசன் 8ன் இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் "டிக்கெட் டூ பின்னாலே யாருக்கு போகக்கூடாதுனு நினைச்சீங்க?" என்று கேட்கிறார். அதற்கு "ராணவ்க்கு போகக்கூடாதுனு நினைச்சேன்" என்று மன்சுரி சொல்கிறார். மேலும் சவுந்தர்யா "ஜெயிக்காமலே ஒருத்தவங்க கிட்ட இருந்து பாய்ண்ட் வேணும் என்று புடிவாதமா இருந்தான்" என்று சொல்கிறார்.


அத்தோடு ரயான் "மன்சூரிக்கு கிடைக்க கூடாதுனு நினைச்சேன்" என்று சொல்கிறார். முத்து "ரயான் முன்னாடி போகக்கூடாதுனு நினச்சேன்" என்று சொல்கிறார். ராணவ், விஷால் இருவருமே ரயானை சொல்கிறார்கள். தீபக் எழுந்து "ரயான் லீட் பண்ணி போனபிறகு இவருக்கு கிடைக்கக்கூடாது என்று நினைச்சேன்" என்று சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Advertisement

Advertisement