இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி பயங்கர ஹிட் கொடுத்த திரைப்படம் படையப்பா. இந்த திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் தொடர்பாக ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்தார்கள். இந்நிலையில் இதன் ரீ-ரிலீஸ் தொடர்பான சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் படையப்பா. இந்த படத்தில் ரஜனி மாஸ் காட்டியிருப்பார். அதிலும் குறிப்பாக ரம்யா கிருஷ்ணன் வில்லி ரோலில் மிரட்டி இருப்பார். இவருக்கு நல்ல ரீச் கொடுத்தப்படமும் இதுதான். இந்நிலையில் சமீபகாலமாக நிறைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. தற்போது படையப்பா திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் அப்டேட்டை கே.எஸ்.ரவிக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில் "ரஜினிகாந்த் சினிமாத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை கொண்டாடும் வகையில் ராஜனிகாந்தின் படையப்பா ரீ-ரிலீஸ் ஆகும் அனைவரும் கொண்டாட தயாராகுங்கள்" என்று கூறியுள்ளார். இந்த செய்தி ரஜனி ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!