• Jan 13 2026

சினிமா உலகை அதிரவைத்த ரிஷப் ஷெட்டி.! வசூலை வாரி இறைக்கும் காந்தாரா: சாப்டர்–1...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022-ஆம் ஆண்டு வெளியான காந்தாரா திரைப்படம், இந்திய திரையுலகில் புதிய பரிணாமத்தைக் கொண்டு வந்தது. கர்நாடகாவின் பாரம்பரிய கலை மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பழமையான கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.


அதன் தொடர்ச்சியாக, தற்போது அதன் பெயரில் உருவாக்கப்பட்ட ‘காந்தாரா: சாப்டர்–1’  அக்டோபர் 2, 2025 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளிவந்ததிலிருந்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், வசூல் ரீதியாக ஆச்சரியப்படுத்தும் வளர்ச்சியையும் பெற்றது.

படம் வெளியான முதல் வாரமே பல்வேறு மொழிகளில் சர்வதேச அளவில் அதிரடி வசூல் சாதனைகளை புரிந்தது. இந்தியாவில் மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதற்கமைய, வெளியான இரண்டு வாரங்களில், உலகளாவிய ரீதியில் 717 கோடி வசூலைப் பெற்றுள்ளது என தற்பொழுது கூறப்படுகிறது. படம் வெளியாகிய நாளிலிருந்தே, சமூக ஊடகங்களில் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, பாரம்பரிய கலாச்சாரம், தெய்வீக உணர்வு ஆகியவை ஒரே கதையில் ஆழமாக சொல்லப்பட்ட விதம், பலரை ஈர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement