தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகன் என்ற வட்டத்தில் தன்னை நிலைநாட்டியிருக்கும் நடிகர் சூரி, தனது அடுத்த பெரிய படைப்பு “மண்டாடி” பற்றிய ஒரு முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
தற்போது வெளியான அந்த அப்டேட்டில், இப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையால் படம் இன்னும் பிரமாண்டமடையும் என தெரிவித்துள்ள சூரி, ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளார்.
சமீபத்தில் தனது சமூக ஊடக பக்கங்களில் நடிகர் சூரி ஒரு புகைப்படத்தையும் மற்றும் உணர்ச்சி மிகுந்த செய்தியையும் பகிர்ந்துள்ளார். அதில், அவர் இயக்குநர் மதிமாறன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உடன் இருக்கிறார்.
அந்த புகைப்படத்துடன் சூரி, “மண்டாடி படம் எங்கள் இசையமைப்பாளர் G.V.பிரகாஷின் மந்திர இசையால் இன்னும் பிரமாண்டமாக ஜொலிக்கும்..” என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார்.
Listen News!