ஜே.கே. சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் நவம்பர் 28, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த action drama என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், ரசிகர்களிடையே பெரிய அளவிலான வரவேற்பைப் பெறுமா என்று தொடக்கத்திலிருந்தே ஆர்வம் காணப்பட்டது.

ஆனால் வெளியீட்டுக்குப் பிறகு மூன்று நாட்களில் கிடைத்த வசூல் தகவல்களைப் பார்க்கும் போது, படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதைத் தெளிவாகக் காணமுடிகிறது.
படம் வெளியான முதல் நாளிலேயே மிகக் குறைந்த துவக்க வசூல் காணப்பட்டதாக தொழில் வட்டாரங்களில் பேசப்பட்டது. கீர்த்தி சுரேஷ், ராதிகா உள்ளிட்டோர் சிறப்பாக நடித்திருந்தாலும், வெளியீட்டுக்குப் பிறகு விமர்சனங்கள் நெகட்டிவாக இருந்ததால் ரசிகர்கள் பெருமளவில் திரையரங்கிற்கு சென்று பார்க்கவில்லை.

இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்நில்க் (Sacnilk) இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, ‘ரிவால்வர் ரீட்டா’ படம் முதல் மூன்று நாட்களில் வெறும் 2.9 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. இது தமிழ் சினிமாவின் நடுத்தர தொடக்க வசூல் எனவே பார்க்கப்படுகிறது.
Listen News!