இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக காணப்படுகிறார் மிருணாள் தாகூர். இவர் தமிழில் நடித்த சீதா ராமன் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சமீப காலமாகவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுசுடன் மிருணாள் தாகூரும் காதலிப்பதாக கிசுகிசு தகவல்கள் வெளியாகின.
அதே நேரத்தில், மிருணாள் தாகூர் நடித்த சன் ஆப் சர்தார் 2 பட விழாவில், தனுஷ் கலந்து கொண்டதும் அவருடன் மிருணாள் கைகோர்த்து சுற்றியதும் பேசு பொருளாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து பேசிய மிருணாள் தாகூர், தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரை பற்றியும் வதந்திகள் பரவி வருவதை நாங்கள் அறிகின்றோம். இதுபோன்ற வதந்திகளை பார்க்கும்போது சிரிப்பு தான் வருகின்றது என்று விளக்கம் கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் - நடிகை மிருணாள் தாகூர் இருவரும் ரகசியமாக காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் உச்சத்தில் இருப்பதால் தங்களுடைய காதலை பொது வெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், தங்களுடைய நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் கலந்து கொண்ட போது மட்டுமே காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Listen News!