• Dec 02 2025

பிக்பாஸில் இந்தவார தல யார் தெரியுமா.? வெளியான ப்ரோமோவால் ஷாக்கில் ரசிகர்கள்.!

subiththira / 22 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது இரண்டு மாதங்களை எட்டவுள்ளது. இந்த சீசனின் முதல் நாளிலேயே 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். நிகழ்ச்சியின் சில வாரங்கள் கழித்து, வைல்ட் கார்ட் என்ட்ரியினால் மேலும் நான்கு பேர் வீட்டிற்குள் வந்ததால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக மாறியது.


ஆனால் நேற்றைய தினம் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முதல் 21 நாட்களிலேயே வாக்கெடுப்பு மூலம் வெளியேறிய ஆதிரை, மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். 

இந்த ரீ-என்ட்ரி வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களிடையே புதுப் பதற்றத்தையும், ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆதிரை மீண்டும் வருவார் என யாரும் எதிர்பார்க்காத நிலையில் இந்த முடிவு ரசிகர்களிடமும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்நிலையில் வெளிவந்த சமீபத்திய ப்ரோமோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ப்ரோமோவில் இந்த வாரத்துக்கான முக்கியமான டாஸ்க்கை கனி வாசித்துக் காட்டுகிறார். 

அதில், ஒவ்வொரு போட்டியாளருக்கும் 15 பிரிக்ஸ் (bricks), 3 Ballகள் கொடுக்கப்பட்டிருக்கும். போட்டியாளர்கள் தங்கள் பிரிக்ஸ்-ஐ ஒரு மேசையின் மீது டோமினோ வடிவில் வரிசையாக அமைக்க வேண்டும். பின்னர் அந்த வரிசையின் இறுதி இடத்தில் ஒரு Ball ஐ வைத்து தள்ளிவிட வேண்டும்.


அதன்போது, Ball basket உள்ளே விழ வேண்டும் என்று வாசித்தார் கனி. இறுதியில், இந்த சவாலான டாஸ்க்கை மிக துல்லியமாக நிறைவு செய்தவர் ரம்யா. இந்த வெற்றியால் ரம்யா இந்த வாரத்திற்கான வீட்டுத் தல (House Leader) பதவியை பெற்றுள்ளார். 

Advertisement

Advertisement