விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், மீனாவும் முத்துவும் ஸ்ருதியை பார்த்து பேசுகின்றார்கள். இதன்போது தான் ரவியின் ரெஸ்டாரண்டுக்கு சென்றபோது அங்கு ரவி நீத்துவை தூக்கி வைத்துக்கொண்டு விளையாடியதாகவும் அதனால் அவரை டிவோஸ் பண்ண போவதாகவும் அதிர்ச்சி கொடுக்கின்றார் ஸ்ருதி.
இதைக் கேட்டு முத்துவும் மீனாவும் விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள். அதற்குப் பிறகு உண்மையான காரணத்தை முத்து சொல்ல, உடனே தன்மீது தப்பு என உணர்ந்து கொள்கின்றார். அதன் பின்பு ஸ்ருதி அவர்களிடமும் மன்னிப்பு கேட்டு ரவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்று கிளம்பிச் செல்கின்றார்.
இன்னொரு பக்கம் ஸ்ருதியை இன்னும் காணவில்லை உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று கேட்க, விஜயாவும் வந்து ரவியிடம் என்ன பிரச்சனை என்று வினாவ, அதற்கு பதில் சொல்ல முடியாமல் ரவி தடுமாறிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.
அதன் பின்பு பங்க்ஷன் ஆரம்பிக்கப்பட்டு மீனாவையும் முத்துவையும் பற்றி ரவியும் ஸ்ருதியும் பெருமையாக பேசுகின்றார்கள். இதை கேட்டு விஜயாவும் ரோகிணியும் முகம் சுழித்து கொள்கின்றார்கள். இறுதியில் பாடகர் ஒருவர் பங்ஷனை களைகட்டும் விதமாக பாட்டு பாடி அசத்துகின்றார்.
இதன்போது ஸ்ருதி ரவியும், மீனாவும் முத்துவும் பாட்டை கேட்டு ரொமான்ஸில் மூழ்கின்றார்கள். இது தான் இன்றைய எபிசோட்.
Listen News!