பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கமலா பாக்கியாவிடம் தனது பொண்ணுடைய வாழ்க்கை இப்படி போய்விட்டதே என கவலைப்பட்டு பேசுகின்றார். இதன் போது பாக்கியா தான் ராதிகாவுடன் பேச வேண்டும் என்று கூறுகின்றார்.
அதன்படியே ராதிகாவுடன் பேசும் போது கோபி உங்களை நினைத்து குடித்து இரவு முழுவதும் வருத்தப்பட்டதாக சொல்கின்றார். ஆனாலும் அதை தன்னிடம் சொல்லவில்லை ஈஸ்வரிடம் தான் சொன்னதாக சொல்லுகின்றார். மேலும் இந்த பிரிவு தற்காலிகமா? நிரந்தரமா? என அவரும் கேட்கின்றார்.
அதற்கு ராதிகா சாதுரியமாக பதில் சொல்லுகின்றார். ஆனாலும் பாக்கியா நான் உங்களை ஒரு நல்ல நண்பியாக தான் பார்க்கின்றேன். உங்களுக்கு எதுவும் என்றால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உங்களுக்கு ஆதரவாக எப்போதும் நான் இருப்பேன் என்று ராதிகாவுக்கு கூறுகின்றார்.
அதன் பின்பு ராதிகாவை கட்டி அணைத்து விட்டு மையூவையும் நெத்தியில் முத்தம் கொடுத்துவிட்டு, உங்களுடைய மகள் இனி நன்றாக இருப்பார் என்று கமலாவிடம் சொல்லிச் செல்கின்றார் பாக்யா.
இன்னொரு பக்கம் ஈஸ்வரி கோபியிடம் ராதிகாவை மறக்குமாறு சொல்கின்றார். மேலும் தான் உன்னுடைய அப்பாவை பிரிந்து இருக்கலையா? பாக்கியா உன்னை பிரிந்து இருக்கலையா? இப்போ வந்தவ ராதிகா.
அவ வந்த பிறகுதான் உன்ட வாழ்க்கைல நிறைய பிரச்சனை நடந்துச்சு என்று சொல்லுகின்றார். அதனால் கோபி தனியாக இருந்து யோசித்துக் கொண்டுள்ளார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!