ஆரம்பத்தில் தனக்கு கிடைத்த சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதன்பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார். அதன் பின்பு அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே அவருக்கு வெற்றியை கொடுக்கின்றன.
ஹரிஷ் கல்யாண் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றன. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான லப்பர் பந்து திரைப்படம் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. அதற்கு முன்பு வெளியான பார்க்கிங் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் லப்பர் பந்து. இதில் ஹரிஷ் கல்யாண் உடன் அட்டகத்தி தினேஷ் முக்கிய கேரக்டர் நடித்திருந்தார்.
கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மற்றும் அதில் இடம்பெற்ற விஜயகாந்தின் பாடல் என பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
இந்த நிலையில், வலைப்பேச்சு சேனலில் உள்ளவர்கள் ஹரிஷ் கல்யாண் பற்றியும் அவர் நடித்து வரும் படம் பற்றியும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி அவர்கள் கூறுகையில், லப்பர் பந்து திரைப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் ரொம்பவே மாறிவிட்டார். தற்போது கவின் நடித்த லிப்ட் படத்தின் இயக்குனர் இயக்கத்தில் படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் ஷூட்டிங் சுமார் 40 நாட்களை கடந்து விட்டது.
அதில் இடம்பெற்ற சண்டை காட்சி ஒன்றும் பக்காவாக எடுக்கப்பட்டது. லப்பர் பந்து திரைப்படத்தின் வெற்றி 2 கதாநாயகர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
Listen News!