தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகை தான் ராஷ்மிகா மந்தானா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்து தனக்கென மிகப் பெரிய இடத்தை தக்க வைத்துள்ளார்.
இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தானாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.
இதில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், அடுத்த வருடம் பிப்ரவரி இவர்களுடைய திருமணம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ராஷ்மிகா மந்தானாவின் முந்திய உறவு பற்றியும் அது முறிந்ததற்கான காரணம் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ராஷ்மிகாவுக்கு ஏற்கனவே கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 2017 இருந்து அவர்கள் காதலித்து உள்ளனர். ஆனால் ஒரு வருடங்களிலேயே அவர்களுடைய காதல் முடிவுக்கு வந்துள்ளது.
அவர்களுக்கு இடையே ஏழு வயது வித்தியாசம் மற்றும் ராஷ்மிகாவின் திரைப்பட வாழ்க்கை உச்சத்தில் இருந்தபோது அவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என ரக்ஷயத்தின் குடும்பம் கூறியது போன்ற காரணங்களால், தனது சுதந்திரத்தை விரும்பிய ராஷ்மிகா அந்த உறவை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். அதன்பின்பே விஜயுடன் அவருடைய உறவு வலுவடைந்தது என கூறப்படுகிறது.
Listen News!