• Jan 18 2025

பொது இடத்தில் அத்துமீறிய ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா..! வைரல் வீடியோ

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா மந்தனா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்த போது அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில் அத்துமீறிய போதும் அவர் யாரையும் காயப்படுத்தாமல் புன்சிரிப்போடு பிளையிங் கிஸ் கொடுத்து அங்கிருந்து நகர்ந்து சென்றது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட் திரை உலகிலும் பிஸியாகி உள்ளார் என்பதும் பெரிய நட்சத்திரங்களுடன் அவர் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்று வருவதால் அவரது சம்பளமும் உச்சத்திற்கு சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விமான நிலையத்திலிருந்து வெளியே ராஷ்மிகா வந்தனா வந்து கொண்டிருந்த போது அவரைப் பார்த்த பலர் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர். ஒரு சிலரை தவிர்த்தாலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் அவர் செல்பி போஸ் கொடுத்த நிலையில் ஒரு கட்டத்தில் அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.

அவருடன் வந்த பாதுகாவலர்கள் ஓரளவு தடுக்க முயற்சித்தாலும், ஒரு சிலர் ராஷ்மிகா மந்தனாவின் கையை பிடித்து செல்பி எடுக்க கூறியதால் அவர் சற்று அதிர்ச்சி  அடைந்தார். இருப்பினும் ராஷ்மிகா யார் மனதையும் புண்படுத்தாமல் தொடர்ந்து சிலருக்கு செல்ஃபிக்கு போஸ் கொடுத்து வந்த நிலையில் புன்சிரிப்போடு அங்கிருந்து அனைவருக்கும் டாடா காமித்து விடைபெற்றார். மேலும் ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். இதனை அடுத்து ராஷ்மிகா மந்தனாவின் இந்த செயலுக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement