• Jan 19 2025

நான் என்ன சீரியல் கில்லரா? பிரசாந்த் இடம் கேள்வி கேட்கும் சிம்ரன்.. ‘அந்தகன்’ டிரைலர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ திரைப்படத்தின் டிரைலர் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகும் என நேற்று பிரசாந்த் அறிவித்திருந்த நிலையில் சர்ப்ரைஸ் ஆக சற்றுமுன் டிரைலர் வீடியோவை இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக பிரசாந்த் இந்த படத்தில் நடித்திருக்கும் நிலையில் அவரது காதலியாக சிம்ரன் நடித்துள்ளார் என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. மேலும் சில முக்கிய கேரக்டர்கள் நடித்துள்ள இந்த படத்தின் திரில்லான காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் காமெடி காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த படம் நிச்சயம் ஹிந்தியை போலவே தமிழிலும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோன்றும் பிரசாந்த் ஸ்லிம்மாக இருக்கிறார் என்றும் அதே 90s காலகட்டத்தில் இருந்த மாதிரி இருக்கிறார் என்றும் கமெண்ட் குவிந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நான் என்ன சீரியல் கில்லரா? என பிரசாந்த் இடம் சிம்ரன் கேள்வி கேட்கும் காட்சி சிறப்பாக உள்ளது.

தியாகராஜன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என டிரைலரின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகிய இந்த படம் நிச்சயம் பிரசாந்துக்கு ஒரு நல்ல ரிஎன்ட்ரி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement