• Jan 09 2026

ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை மயக்கிய ராஷ்மிகா... என்ன அழகு..! என்ன கவர்ச்சி.! அடேங்கப்பா.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நடிகைகளில் ஒருவராக ராஷ்மிகா மந்தனா திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழித் திரைப்படங்களிலும் தடம் பதித்திருக்கும் அவர், தனது அழகு, எளிமை, மனதைக் கவரும் புன்னகை என்பவற்றால் ரசிகர்களை மயக்கி வருகிறார்.


இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் புதிய போட்டோஷூட் படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் ஸ்டைலிஷாகவும், அதேசமயம் எளிமையான கவர்ச்சியுடனும் தோன்றி, ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

சமீபத்தில் ராஷ்மிகா தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் அவர் ஒரு வெள்ளை மற்றும் கறுப்பு நிற உடையில், அழகான ஹேர் ஸ்டைலும், மென்மையான மேக்-அப்புடனும் தோன்றியுள்ளார். 


புகைப்படங்களை வெளியிட்ட சில மணி நேரங்களுக்குள் அந்த பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன. ரசிகர்கள், “She looks Queen..." என்கிற வகையில் கமெண்ட்ஸ் மழை பொழிந்துள்ளனர்.

Advertisement

Advertisement