• Dec 19 2025

2K கிட்ஸ் இப்படியா இருக்கிறாங்க... "Dude" படத்தால் கடுப்பான பாக்யராஜ்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘Dude’ திரைப்படம், இளைய தலைமுறை மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. சமூக வலைத்தளங்களில் இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்தாலும், படம் ஒரு வித்தியாசமான கோணத்தில் இன்றைய தலைமுறையின் உறவுகள், காதல் மற்றும் குடும்ப பிணைப்புகள் பற்றிப் பேசுகிறது எனப் பலர் பாராட்டியிருந்தனர்.


ஆனால், இதே படத்தைப் பற்றி பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் சில வித்தியாசமான, ஆனால் நேர்மையான கருத்துகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறிய கருத்துகள் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

‘Dude’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, அதன் டீசர் மற்றும் பாடல்கள் 2K கிட்ஸ் தலைமுறைகளிடையே பேசப்பட்டது. படம் காதலால் இன்று உள்ள இளம் தலைமுறையை எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் காட்டும் வகையில் இருந்தது.

ஆனால் படம் வெளியான பின், சிலர் “இது 2K கிட்ஸின் மனநிலையை சரியாக வெளிப்படுத்துகிறது” என்று பாராட்டியிருந்தனர்; மற்றொருபக்கம், சிலர் “இது இளைய தலைமுறையை எதிர்மறையாக காட்டுகிறது” என்று குற்றம் சாட்டினர்.


இந்த விவாதத்திலேயே, பாக்யராஜ் தனது அனுபவத்துடன் கலந்த கருத்தைத் தெரிவித்துள்ளார். பாக்யராஜ் கூறியதாவது, “Dude படம் 2K கிட்ஸுக்கு பிடிக்கும் படம் என்கிறார்கள். ஆனா அந்த படத்தில் அவனுக்கு அப்பா, அம்மா, உறவு, செண்டிமெண்ட் எல்லாமே இருக்கு. காதல் என்றால் அதில் சுதந்திரம் வேணும்னு நினைக்கிற 2K கிட்ஸ் இருக்கலாம். ஆனா எல்லா உறவையும், எல்லா மரியாதையையும் விட்டு விடணும்னு சொல்லுற மாதிரி இருக்கிறது. அதை ஏத்துக்க முடியாது.”

அவர் மேலும், “2K கிட்ஸ் இப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்றால், Dude படம் இப்போ ஹவுஸ்புள்ளா ஓடிட்டு இருக்கணும். ஆனா அப்படி ஓடல." என்று தெரிவித்துள்ளார். இந்த கூற்றுகள் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

Advertisement

Advertisement