• Dec 18 2025

"ராயன்" படத்தில் சந்தீப் கிஷனின் பாத்திரம் எனக்காக படைக்கப்பட்டது... பிரபல நடிகர் ஓபன்டாக்

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கியுள்ள நடிகர் விஷ்ணு விஷால், தனது கதாபாத்திரங்களாலும், உழைப்பாலும் ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்துள்ளார். 


அவரது முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற திரைப்படங்கள் இன்னும் ரசிகர்களின் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. இந்நிலையில், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ராயன்’ (Raayan) திரைப்படம் குறித்து விஷ்ணு விஷால் வெளிப்படுத்திய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 

தற்பொழுது அளித்த பேட்டியில் விஷ்ணு விஷால் ,“தனுஷ் நடித்த ராயன் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க இருந்தேன். அந்த கதாபாத்திரம் ஆரம்பத்தில் எனக்காகவே எழுதப்பட்டது. பின்னர், நான் அந்த பாத்திரத்தை கொஞ்சம் மாற்றி எழுதலாமா? எனக் கேட்டேன். அதற்கு தனுஷ் சார் உடனே ஒப்புக் கொண்டார். அது எனக்கு உண்மையிலேயே ஒரு ஆச்சரியமாக இருந்தது.” எனத் தெரிவித்திருந்தார். 


படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், தனுஷின் இயக்கத்துக்கும் கதாபாத்திர அமைப்பிற்கும் பெரும் பாராட்டுகள் கிடைத்தன. இந்நிலையில், விஷ்ணு விஷாலின் ராயன் படம் பற்றிய கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன

Advertisement

Advertisement