• Jul 27 2024

53 வயதில் ரொமான்ஸ் படத்தில் நடிக்கும் நடிகர் மாதவன்.. இயக்குனர் யார் தெரியுமா? டைட்டில் இதுதான்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் மாதவன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பல ரொமான்ஸ் படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘ரன்’, உள்பட சில ரொமான்ஸ் படங்களில் மிக பொருத்தமாக அவர்  ரொமான்ஸ் நாயகனாக இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது.

இந்த நிலையில் அடுத்தடுத்து அவர் ரொமான்ஸ் படங்களிலிருந்து ஆக்சன் படங்களுக்கு நடிக்க ஆரம்பித்தார் என்பதும் தற்போது கூட அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் மாதவன் மீண்டும் ரொமான்ஸ் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. நீண்ட இடைவேளைக்கு பிறகு ரொமான்ஸ் படத்தில் மாதவன் நடிக்க இருப்பதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ’இதுவும் ஒரு காதல் கதை’ என்ற டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் ரொமான்ஸ் மற்றும் காமெடி கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாதவன் நடித்த சில படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார் என்பதும் குறிப்பாக அவர் நடித்த சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படமான ’மின்னலே’ என்ற திரைப்படத்தில் தான் அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் மாதவன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இணைவதை அடுத்து இந்த படத்திலும் சூப்பர் ஹிட் பாடல்கள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement