விஜய் டிவியில் அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒருவராக ஆர்.ஜே ஆனந்தியும் கலந்து கொண்டார்.
ஆர்.ஜே ஆனந்தி பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான கோமாளி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இவர் தனது முதலாவது படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். அதிலும் இந்த படத்தில் அவரது கேரக்டர் மிகவும் பேசப்பட்டது.
இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கு பற்றிய ஆர்.ஜே ஆனந்திக்கு ஆரம்பத்தில் அதிக வரவேற்பு காணப்பட்டது. எனினும் 63 நாட்களில் எதிர்பாராத விதமாக இவர் எலிமினேட் ஆகி இருந்தார்.
d_i_a
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வந்த ஆர். ஜே ஆனந்தி தனியார் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். அதன்படி அவர் வழங்கிய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சிக்கு வர முதல் எனக்கு இந்த வீட்டில் உள்ள ஒருத்தரையும் தெரியாது. அவருடைய பாஸ்ட் தெரியாது. நான் அவங்கள எப்படி பார்த்தேனோ அவங்களும் என்ன அப்படித்தான் பார்த்தாங்க..
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித் சாரும் Fake-அ இருக்கார் என்று என்னால சொல்ல முடியல. ஏன்னா அவர் இப்படி தானா என்று எனக்கு தெரியாது.
அவர் என்கிட்ட சொன்ன பல விஷயங்கள் உரிய ஆட்களிடம் சென்று சொல்லவில்லையோ என்று தோணும். அத்துடன் பிரச்சனை வரும்போது அவருடைய ஸ்டாண்டர்ட்ட ஒரு இடத்துலயும் பார்க்க இல்லை என்று ஆனந்தி கூறியுள்ளார்.
Listen News!