நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீசாக இருக்கும் திரைப்படம் விடுதலை-2. இதன் ப்ரோமோஷனுக்காக படக்குழு பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டில் விஜய் சேதுபதி அரசியல் குறித்து எழுந்த கேள்விக்கு "விஜய் சார் மாதிரி அரசியலுக்கு வாரத்துக்கு எனக்கு அறிவு இல்லை" என்று கூறியுள்ளார். இந்த விடையம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய பேட்டில் இயக்குநர் KS.ரவிக்குமார் விஜய் சார் அரசியலுக்கு வருவாருனு எதிர்பாத்திங்களா? உங்களுக்கு அரசியல் வாரத்துக்கு என்னம் இருக்கா? என்று கேட்டார். அதற்கு விஜய் சேதுபதி இவ்வாறு பதிலளித்தார் "விஜய் சார் அரசியலுக்கு வருவாருனு நான் சுத்தமா எதிர் பார்க்கவில்லை, இத எப்படி ஆரம்பிச்சாரு என்றே எனக்கு பெரிய ஆச்சரியமா இருந்துச்சி. நான் அரசியலுக்கெல்லாம் வர மாட்டேன் சார் எனக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை. அரசியல் ஆசைன்னு சொல்லுவாங்க அது பத்தி எனக்கு தெரியாது ஆனா அரசியல் ஒரு பொறுப்பான வேலையா பாக்குறேன்". அந்தளவுக்கு பொறுப்பு நமக்கு இல்லை சார் என்று சிரித்து கொண்டே கூறினார்.
இதனை கேட்டு சிரித்த ks.ரவிக்குமார் "அப்போ நீங்க இல்லனா சூரி அரசியலுக்கு வருவாருனு நினைக்கிறேன்" என்று கூறினார். இதனை கேட்டு சூரி தெரியவில்லை என்பது போல கையால் சைகை காட்டி சிரித்தார். இதனை பார்த்து அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Listen News!