90ஸ் கிட்ஸ்களின் பேவரிட் நாயகனாக காணப்படுபவர் தான் நடிகர் ஜாக்கி சான். இவரது நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான கராத்தே கிட் படத்திற்கு பிறகு இவருக்கு பல ரசிகர்கள் உருவானார்கள். இந்த படம் சுமார் 359 மில்லியன் டாலர் வசூலை பெற்றிருந்தது.
நடிகர் ஜாக்கி சானின் அசாத்திய சண்டை காட்சிகள் பலரையும் கவர்ந்ததாக காணப்படுகிறது. இவர் தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.
d_i_a
எனினும் திடீரென்று ஜாக்கி சான் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இறுதியாக 2023 ஆம் ஆண்டு வெளியான ரைட் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகின்றார் ஜாக்கி சான்.
இந்த நிலையில், ஜாக்கி சான் நடிக்கும் கராத்தே கிட் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஜாக்கி சான் 'ஹான்' என்ற கேரக்டரில் நடிக்கின்றார். மேலும் பென் வாங் லி பாங் என்பவர் புதிய மாணவராக நடிக்கின்றார்.
இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாத 30ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே பட குழுவினர் அதிகாரவபூர்வமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!