பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் சமீபத்தில் பெரிய ஹிட் கொடுத்தார். அத்தோடு சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் "தளபதி விஜய்- நடிகர் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கி கொடுத்தது சரியானு நான் கேட்க முடியாது அதுக்கு இதுதான் காரணம்" என்று சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் Catch-up With Kavi என்ற பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளினி "இத்தனை வருடம் சினிமாவில் இருக்கீங்க உங்களுக்கு சினிமா எப்படி இருக்கு" என்று கேட்கிறார். அதற்கு ஹரிஷ் இவ்வாறு பதிலளித்தார். " அதாவது நிறைய போட்டி இருக்கு நீயா நானா அப்டிங்கிறது எப்போதுமே இருக்கு.. ரஜனி-கமல், அஜித்-விஜய், சூர்யா-தனுஷ் அப்டினு ஆரம்பத்துல இருந்தே இருக்கு. என்னை பொறுத்தவரையில் எல்லாரும் முன்னேற்றதுக்கான வழியைத்தான் பார்க்கணும்" என்று கூறினார்.
மேலும் சமீபத்தில் கோட் திரைப்படத்தில் தளபதி விஜய் நடிகர் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கி கொடுத்து இருப்பாரு அது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று எழுந்த கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார். "தளபதி விஜயின் ரசிகன் நான் அவருடைய நிறைய படங்களை நான் பார்த்து ரசித்து இருக்கேன். இப்போ அவரு அரசியலுக்கு போறாரு அது பெரிய விஷயம் ஆனா நடிக்கமாட்டேன் என்று சொன்னது ரொம்ப வருத்தம். கிரிக்கெட் விட்டு சச்சின் போகபோறாருனு சொல்லும் போதே ரொம்ப கவலையா இருந்தது இப்ப இவ்வளோ நாள் பார்த்து பழகிய தளபதி இனி படம் நடிக்க மாட்டாரு என்பது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கு எனக்கு மட்டும் இல்லை எல்லாருக்குமே அப்படி தான் இருக்கும்" என்று கூறினார்.
மேலும் பேசிய இவர் "விஜய் சார் மற்றும் சிவா சார் எல்லாருமே உழைக்காம இந்த இடத்துக்கு வரவில்லை, ரொம்ப கஷ்ட்டப்பட்டு தான் வந்தாங்க சோ அவர்கிட்டயா அதைகொடுக்கணும் அப்படி என்று எல்லாம் நான் கேட்டது இல்லை. யார் கிட்ட போகணும்னு இருக்கோ அது அங்க சரியா போய் சேரும் இதுல என்னுடைய ஜஜ்மென்ட் எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.
Listen News!