மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பல்லாயிரக்கணக்கானோரை கவர்ந்த நடிகை தான் ரம்யா பாண்டியன். இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் அடுத்த மொட்டைமாடி போட்டோ ஷூட் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாப்புலர் ஆக்கியது. அதன் பின்பு பிக்பாஸ், கோமாளி என ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலமாக்கினார்.
கடந்த ஆண்டு தனது காதலர் ஆன லவேல் தவால் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் ரிஷிகேஷில் உள்ள நதிக்கரையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அதன் பின்பு திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியிருந்தார்கள்.
அதன் பின்பு தனது கணவருடன் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றிருந்தார் ரம்யா பாண்டியன். அங்கு எடுத்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கியிருந்தார்.
இந்த நிலையில், ரம்யா பாண்டியனின் சகோதரர் ஆன அரசு பாண்டியனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
அதில் அவர் மிகுந்த சந்தோஷம் கொண்டவராக காணப்படுகிறார். தற்போது இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றன.
Listen News!