தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் எமி ஜாக்சன். இந்திய சுகந்திர போராட்டத்தில் நடைபெறும் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் எமி ஜாக்சனுக்கு பெற்றுக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, கெத்து, எந்திரன் 2.0, தேவி, மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்பு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முக அமைப்பை மாற்றிக் கொண்டார். இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதன் பின்பு இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பெனோயின் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. ஆனாலும் குறுகிய காலத்திற்கு உள்ளையே ஜார்ஜ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார்.
பின்பு ஹாலிவுட் நடிகரான எட் கெஸ்விக் என்பவரை காதலித்தார். ஒரு கட்டத்தில் சுவிஸ்லாந்தில் உள்ள பனி படர்ந்த மலையில் ஒரு பாலத்தின் மீது நின்று தனது காதலை உலகறிய அறிவித்து இருந்தார். குறித்த புகைப்படங்களும் வைரலாகி இருந்தன. தற்போது அவர் மீண்டும் கர்ப்பமாக காணப்படுகின்றார்.
இந்த நிலையில், எமி ஜாக்சன் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் அதிகாலையில் பெட்ரூமில் இருந்து எழும்பும்போதே அவருக்கு அவருடைய கணவரும் குழந்தையும் சப்ரைஸ் கொடுத்துள்ளனர். தற்போது குறித்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனம் பெற்று வருகின்றன.
Listen News!