சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், ஸ்ருதியை காணவில்லை என ரவி டென்ஷனில் காணப்படுகின்றார். மறுபக்கம் விஜயா, ஸ்ருதியின் அம்மா, அப்பா ஆகியோர் ஸ்ருதியை பற்றி கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் அவர்களை சமாளிக்கும் விதத்தில் டான்ஸ் ப்ரோக்ராமை ஸ்டார்ட் பண்ண வைக்கின்றார்.
அதன் பின்பு விஜயாவை ஆடச்சொல்ல, விஜயாவும் பரதநாட்டியம் ஆடுகின்றார். இதன் போது அண்ணாமலை பக்கத்தில் இருந்த வாசுதேவன் விஜயா நல்ல ஆடுறாங்களே.. அவரை வைத்து நீங்க சம்பாதித்து பெரிய ஆளா ஆகிடலாம் என்று சொல்லுகின்றார். அதற்கு அண்ணாமலை நான் நேர்மையாக சம்பாதித்து தான் எனது குடும்பத்தை பார்த்தேன் அப்படி என்றும் எனக்கு அவசியமில்லை என பதிலடி கொடுக்கின்றார்.
அதன் பின்பு விஜயா பார்வதியையும் சுதாவையும் அழைத்து தன்னுடன் நடனம் ஆட வைக்கின்றார். இதன்போது வாசுதேவனின் மனைவி நடனமாட உங்களுடைய மனைவியும் நன்றாக நடனம் ஆடுகின்றார்களே அவரை வைத்தே நீங்களும் பெரிய ஆள் ஆகிவிடலாம் என்று வாசுதேவனுக்கு பதிலடி கொடுக்கின்றார் அண்ணாமலை.
இன்னொரு பக்கம் முத்துவும் மீனாவும் ஸ்ருதியை தேடி டப்பிங் சென்டருக்கு செல்லுகின்றார்கள். அங்கு அவர் வரவில்லை அதன் பின்பு இன்னொரு இடத்திற்கு செல்ல, அவர் வக்கீலை சந்திக்க சென்றதாக சொல்லுகின்றார்கள்.
அதன்படி ஸ்ருதியை தேடி அங்கு செல்ல ஸ்ருதி அங்கு இருக்கின்றார். இதன்போது தன்னை ரவி ஏமாற்றுவதாகவும் அதனால் தான் அவருக்கு டிவோர்ஸ் கொடுக்கப் போவதாகவும் சொல்லுகிறார்.
இறுதியில் ஸ்ருதியின் அப்பா, அம்மா ரவியிடம் உங்களுக்கும் ஸ்ருதிக்கு எதுவும் பிரச்சனையா? அப்படி என்றால் எதுவும் சொல்லுங்கள் ஏனென்றால் , ஒருமுறை பர்த்டே பங்க்ஷன் அன்று சண்டை போட்டுவிட்டு ஸ்ருதி கிளம்பிவிட்டார். கோவத்தில் பங்க்ஷன் முடிந்த பிறகு தான் திரும்பி வந்தார் என்று சொல்ல, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஸ்ருதி வந்து விடுவார் என்று சமாளித்துவிட்டு செல்கின்றார்.
Listen News!