தென்னிந்திய நடிகரான ராம்சரண், மகதீரா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அதற்குப் பிறகு மாஸ் ஹீரோவாக வலம் வரும் இவர் 2012 ஆம் ஆண்டு தனது சிறுவயது தோழியும் காதலியுமான உபாசனாவை திருமணம் செய்தார்.
இவர்களுடைய திருமணம் நடிகரும் ராம் சரணின் தந்தையுமான சிரஞ்சீவியின் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பின்பு சில ஆண்டுகள் இவர்கள் குழந்தை இல்லாமல் இருந்தனர்.
திருமணம் ஆன புதிதிலேயே கருமுட்டையை உடைய வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, தங்களுக்கு வேண்டிய நேரத்தில் குழந்தையை பெற்றுக் கொண்டனர். அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், ராம்சரண் - உபாசனா தம்பதியினர் தங்களது இரண்டாவது குழந்தை பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர்.
அதாவது சமீபத்தில் ராம்சரண் வீட்டில் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. அதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதைத் தாண்டி, இன்னொரு கொண்டாட்டமும் இவர்களுடைய வீட்டில் நடந்திருக்கின்றது.
இது தொடர்பில் ராம்சரண் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில், இந்த தீபாவளியை இரட்டிப்பான மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.. இரட்டிப்பான அன்பு மற்றும் இரட்டிப்பான ஆசீர்வாதங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
This Diwali was all about double the celebration, double the love & double the blessings.
🙏🙏 pic.twitter.com/YuSYmL82dd
Listen News!