தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் சபேஷ் , பிரபல இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரர் ஆவார். தேவாவிற்கு சபேஷ், முரளி என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். அதில், சபேஷ் தனது சகோதரர் முரளியுடன் இணைந்து சபேஷ் - முரளி என்ற பெயரில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பத்தில் தேவாவுடன் உதவி இசை அமைப்பாளராக பணியாற்றினார்கள். அதன்பின்பு கடந்த 2001 ஆம் ஆண்டு முதன் முறையாக சபேஷ் - முரளி இசை காம்போவில் சரத்குமாரின் `சமுத்திரம்' படம் வெளியானது.
இதைத் தொடர்ந்து, தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23-ம் புலிகேசி, பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் என 25 படங்களுக்கு மேல் இருவரும் இசையமைத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் சபேஷ் இன்று திடீரென உடல் நலக்குறைவினால் காலமானர். இவரது உடல் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சபேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!