• Jan 19 2025

அவுத்து போட்டுட்டு போ.. பொட்ட கழுதை..! மஞ்சுளா டீச்சரை தாறுமாறாக திட்டிய ரசிகர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் ஏழாவது சீசனில் பங்கு பற்றி பலரின் மனதை கவர்ந்த ஒரு போட்டியாளர் தான் மாயா கிருஷ்ணன். இவர் ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல் மேடை நாடகங்களில் ஆர்வம் காட்டும் ஒரு கலைஞர் ஆகவும் காணப்படுகின்றார்.

ஒரு சில படங்களில் மாயா கிருஷ்ணன் நடித்திருந்தாலும் அவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திய படம் என்றால் அது உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தான். அதில் இவர் நடித்த கேரக்டர் சர்ச்சைக்கு உள்ளதாக காணப்பட்டாலும் இவர் அதனுடாக மிகவும் பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் 7வது சீசனில் பங்கு பற்றிய மாயா கிருஷ்ணன் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அதிலும் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட விஷயத்தில் முக்கிய காரணமே மாயா தான் என்ற பேச்சுக்களும் அடிபட்டன.

d_i_a

அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது மாயாவும் பூர்ணிமாவும் செய்யும் சேட்டைகள் எவற்றையும் கமலஹாசன் கண்டு கொள்ளவில்லை. இதனால் மாயா பற்றியும் கமலஹாசன் பற்றியும் ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இருந்தாலும் அந்த சீசனை மாயாகிருஷ்ணன் தான் என்டர்டைமென்ட் பண்ணக்கூடிய ஒருவராக காணப்பட்டார்.


இந்த நிலையில், தற்போது மாயா கிருஷ்ணன் தனது இன்ஸ்டா  பக்கத்தில் மஞ்சுளா டீச்சர் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை என்டர்டைன்மென்ட் பண்ண மீண்டும் களத்தில் இறங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் சிரிக்க வைத்திருந்தது. 

எனினும்  குறித்த வீடியோவில் மாயா கிருஷ்ணன் வகுப்பறையில் பாடம் படிப்பிப்பது போலவும் ஒழுக்கத்தை படிப்பிப்பது போலவும் முக்கியமாக பெண்கள் எப்படி துப்பட்டா போட வேண்டும், எப்படி அமர வேண்டும் என்பதை பற்றியும் காமெடியாக கூறியிருந்தார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், அப்படி என்றால் அவுத்து போட்டுட்டு போ.. உன்னை யாரு கேட்க போறாங்க.. பொட்ட கழுதை.. என்று மாயாகிருஷ்ணனை திட்டி போட்டுள்ளார். இதனை ஸ்டேட்டஸ் இல் வைத்த மாயா அந்த ரசிகரை மிஸ் பண்ணுவதாக வெளியிட்டிருந்தார். தற்போது இவருடைய வீடியோ வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement