• Feb 27 2026

வெளியானது நடிகர் விக்ரமின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

முன்னர் நடிகர் சீயான் விக்ரம் கடைசியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார்.  இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 


அதற்கு அடுத்து இயக்குனர் சு. அருண்குமார் இயக்கத்தில் வீர தீரன் சூரன் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் விக்ரம். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது விரைவில் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி வருகிறார்கள்.


இதனையடுத்து சியான் விக்ரம் தனது 63வது திரைப்படத்தில் இயக்குனர் மடோன் அஷ்வினுடன் இணையவுள்ளார். இயக்குனர் மடோன் அஸ்வின் யோகி பாபுவை வைத்து மண்டேலா என்கின்ற திரைப்படத்தை இயக்கிய மிகப்பெரிய வெற்றியை கொடுத்தவர். இரண்டாவது திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து மாவீரன் என்கின்ற படத்தை இயக்கி வெற்றி கொடுத்தார்.


மடோன் அஸ்வின் அரசியல் கதைகளத்தை காமெடியாக சொல்வது இவரின் பலம் என்றே கூறலாம்.  இவரது இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிக்கப் போகின்றார் என்கின்ற தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement