• Aug 11 2026

இந்தோனேசிய நீர்வீழ்ச்சியில் சொட்டச் சொட்ட நனைந்தபடி பிரியங்கா நல்காரி! வைரல் போட்டோஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் பிரியங்கா நல்காரி. இதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் தொடரில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து தனது நீண்ட நாள் காதலர் ராகுலை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சீரியலில் இருந்து  விலகி இருந்தார்.

சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான நள தமயந்தி சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அந்த சீரியலும் விரைவில் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது கணவருடன் சேர்ந்து பிசினஸை கவனித்து வருகின்றார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து வருவார். அண்மையில் தான் மலைப்பாம்பு ஒன்றை தனது கழுத்தில் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது தனது காதல் கணவருடன் இந்தோனேசியாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது குறித்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement