• Oct 09 2026

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை வீட்டில் விசேஷம்.. குவியும் பாராட்டுக்கள்.! வைரலான வீடியோ

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்களில் முக்கியமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. குடும்ப உறவுகளை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த தொடரில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக அரசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யாவும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். இவரது நடிப்புக்கும் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


இந்நிலையில் சத்யா தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் வகையில், கியூட்டான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியானதும் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சத்யாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சத்யாவின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் அவரது புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement