• Sep 12 2026

ஏன் எனக்கு மட்டும் இப்படியொரு நோய்? முதன்முறையாக வெளிப்படையாக பேசிய சமந்தா.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். ‘மயோசிடிஸ்’ எனும் ஆட்டோ இம்யூன் நோய் பாதிப்புக்கு ஆளான பிறகு, தனது வாழ்க்கையிலும் சினிமா பயணத்திலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சிகிச்சை, ஓய்வு என சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மயோசிடிஸ் பாதிப்பு குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, “மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தை இழந்தது போல் உணர்ந்தேன். இந்த நோய் எனக்கு வராமல் இருந்திருக்கலாம் என நினைத்திருக்கிறேன். ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்?” என்ற கேள்வி எழுந்ததாக தெரிவித்துள்ளார்.


ஆனால், அந்த மனநிலையிலேயே தொடர்ந்து இருக்காமல், அதிலிருந்து தான் வெளியே வந்ததாகவும் சமந்தா கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது நோயை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிய அவர், தற்போது அதையே வாழ்க்கையில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாடமாக பார்க்கிறார்.

“இந்த நோய் எனக்கு மன உறுதியையும் நம்பிக்கையையும் கற்றுக்கொடுத்த விலைமதிப்பற்ற பாடமாக மாறியுள்ளது” என சமந்தா தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அவரது இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement