• Oct 01 2026

‘மண்டாடி’ பட ரிலீஸால் மதுரையில் அட்ராசிட்டி பண்ணும் ரசிகர்கள்.. வைரலாகும் காட்சிகள்!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 10) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், முதல் நாள் முதல் காட்சியை காண சூரியின் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர்.

குறிப்பாக மதுரையில் ‘மண்டாடி’ படத்தின் FDFS-ஐ காண வந்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் பல்வேறு வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் திரையரங்குகள் முன்பு ஆட்டம், பட்டாசு என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மறுபுறம் சிலர் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.


ஆட்டோவின் மேல் அமர்ந்தபடியும், காரில் தொங்கியபடியும் சில ரசிகர்கள் சென்றுள்ளனர். இதுமட்டுமின்றி, ஏராளமான இருசக்கர வாகனங்களுடன் பைக் பேரணியாகவும் ரசிகர்கள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக மதுரையில் சில பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் இந்த கொண்டாட்ட காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதே நேரத்தில், சினிமா கொண்டாட்டம் என்றாலும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் ரசிகர்கள் பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்ற கருத்துகளும் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement