• Sep 11 2026

ஆதியின் சம்பவம் ஆரம்பம்.. ‘மீசையை முறுக்கு 2’ டிரெய்லர் குறித்து படக்குழு அறிவிப்பு

shali / 45 minutes ago

Advertisement

Listen News!

ஹிப்ஹாப் தமிழா ஆதி, சைத்ரா ஜே ஆச்சார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மீசையை முறுக்கு 2’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார். தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’, ‘சிவகுமாரின் சபதம்’, ‘அன்பறிவு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில், முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசையை முறுக்கு 2’ உருவாகியுள்ளது. இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் இப்படத்தில் சைத்ரா, கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன், யூடியூபர் ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ‘மீசையை முறுக்கு 2’ செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாளை செப்டம்பர் 12-ம் தேதி டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Advertisement

Advertisement