• Sep 10 2026

தமிழகத்தில் மட்டும் ஏமாற்றமா? சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ

shali / 54 minutes ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. குடும்பப் பின்னணியில் உருவாகியிருந்த இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக மமிதா பைஜு மற்றும் ராதிகாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வித்தியாசமான கதைக்களம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படம் வெளியானது முதல் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைத் தாண்டி மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.220 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெளியான பெரும்பாலான இடங்களில் படம் வெற்றிகரமாக ஓடியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் வசூல் எதிர்பார்த்த அளவை எட்டவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இப்படம் சுமார் ரூ.80 கோடி வசூல் செய்தால் மட்டுமே வெற்றிப் படமாக கருதப்படும் என கூறப்பட்ட நிலையில், இதுவரை ரூ.62 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மற்ற பகுதிகளில் ஹிட் அடித்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’, தமிழகத்தில் மட்டும் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மத்தியில் இந்த வசூல் நிலவரம் கவனத்தை ஈர்த்துள்ளது.


Advertisement

Advertisement