• Sep 10 2026

கார்த்தியா? சூரியா? ஒரே நாளில் களமிறங்கிய இரண்டு திரைப்படங்கள்.. யாருடைய கை ஓங்கும்?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ மற்றும் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இன்று (செப்டம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரண்டு முக்கியமான படங்களை காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


கார்த்தி நடிப்பில் கடந்த காலத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவாகியுள்ளது. இப்படத்தை மீண்டும் PS மித்ரன் இயக்கியுள்ள நிலையில், கார்த்தியுடன் SJ சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.


மறுபுறம், நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, தற்போது கதாநாயகனாக தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள சூரியின் நடிப்பில் ‘மண்டாடி’ வெளியாகியுள்ளது. ‘விடுதலை’, ‘கருடன்’ போன்ற படங்களின் மூலம் தனது நடிப்பு திறனை நிரூபித்த சூரி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இரண்டு படங்களும் ஒரே நாளில் களமிறங்கியுள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் யார் ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள்? என்ற கேள்வி தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement