மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம், குறிப்பாக அதன் பிரம்மாண்ட காட்சிகள் மற்றும் கடலில் இடம்பெறும் படகு போட்டி காட்சிகளுக்காக ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
வழக்கமான கதைக்களத்தில் இருந்து மாறுபட்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’, சூரியின் நடிப்பிலும் மற்றொரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. படம் வெளியான நிலையில், அதன் வசூல் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

அதன்படி, ‘மண்டாடி’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் ரூ.8 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், உலகளவில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இரண்டு நாட்களில் இப்படத்தின் மொத்த வசூல் ரூ.18 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வார இறுதி நாட்களில் ரசிகர்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் படத்தின் வசூல் இன்னும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இன்று மட்டும் உலகம் முழுவதும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் சூரியின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வசூல் சாதனையை ‘மண்டாடி’ திரைப்படம் படைக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Listen News!