சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்யா கணேசன். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த தொடரில் அவரது நடிப்பு மற்றும் கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு, அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.
‘பாக்கியலட்சுமி’ தொடரை தொடர்ந்து ‘மகாநதி’ உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார் திவ்யா கணேசன். இதன் மூலம் சீரியல் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து, பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட திவ்யா கணேசன், தனது தனித்துவமான அணுகுமுறையால் ரசிகர்களை கவர்ந்தார். நிகழ்ச்சியின் முடிவில் டைட்டிலை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பிக்பாஸ் வெற்றிக்குப் பிறகு அவரது சினிமா மற்றும் வெப் தொடர் வாய்ப்புகளும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
தற்போது சின்னத்திரையை விட வெப் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வரும் திவ்யா கணேசன், தனது அடுத்தடுத்த படைப்புகள் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு திவ்யா கணேசன் வெளியிட்டுள்ள ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், இந்த புகைப்படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
Listen News!