• Jan 19 2025

இந்தியன் 2ல் நடிக்க மறுத்த எதிர்நீச்சல் பட்டம்மா ..! அவரே கூறிய காரணம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார்.

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாகவே, கிட்டத்தட்ட 28 வருடங்கள் கழித்து இந்தியன் 2 திரைப்படம்  வெளியாகி இருந்தது. இந்த படம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளும் புரமோஷன் செய்யப்பட்டு தடபுடலாக வெளியானது.

எனினும் இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். தியேட்டரில் படம் பார்த்தவர்கள் எல்லோரும் இந்தியன் தாத்தாவை கழுவி ஊற்றியது தான் மிச்சம்.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு எதிர்நீச்சல் சீரியலில் நடித்த  பட்டம்மா மறுத்துள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. 


அதாவது எதிர்நீச்சல் சீரியலில் நடித்த  பட்டம்மா கூறுகையில், எனக்கு டிராமா தான் ரொம்ப பிடிக்கும். சினிமா நெஜமாகவே பிடிக்காது. ஆனால் சினிமாவில் 15 படம் பண்ணியிருக்கேன் அது எல்லாமே சின்ன சின்ன ரோல் தான். பெரிய ரோல் எல்லாம் கூட கேட்டு இருக்காங்க. 

இந்தியன் 2 படத்தில் கூட ஒரு ரோலுக்கு பத்து நாட்கள் டேட் கேட்டு இருந்தாங்க. ஆனா 10 நாளெல்லாம் என்னால ஷூட்டிங் போக முடியாது. அதற்கு காரணம் எனக்கு மெய்னா ப்ரொடக்ஷன் சாப்பாடு ஒத்துக் கொள்ளாது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement